Tuesday, October 11, 2011

இந்த உள்ளாட்சித் தேர்தல் பொது மக்களுக்கு என்ன செய்யப்போகிறது ?


செப்டெம்பர் 2011வளசரவாக்கம் செய்தி மடல் என்னும் பத்திரிகையில் வந்திருப்பது மேலே காண்க. 
இந்த உள்ளாட்சித் தேர்தல் பொது மக்களுக்கு என்ன செய்யப்போகிறது ?

    வீதிகள் சுத்தமாக இருக்கப்போகிறதா ? மலை போல் குவிந்து துர் நாற்றம் வீசும் வீதியிலே அன்றாடம் குப்பைகள், சாக்கடை கழிவுகள் அகற்றப்பட‌    போகின்றனவா ?  வீதிகளின் இருபக்கங்களிலும் கையேந்தி பவன்கள் கொட்டும் மிச்ச் மீதி உணவுப் பொருட்களைத் திங்கும் நாய்கள் தொந்தரவிலிருந்து பொது மக்கள் காப்பாற்றப்படுவார்களா ?

    கொசுத்தொல்லை பரவா வண்ணம் ஒரு தடுப்பு நடவடிக்கை ஏதும் நடைபெறப்போவதா ?

    மருத்துவகங்கள் சீர் படுத்தப்படுமா ?   அங்காவது சுத்தம் இருக்குமா ?

    தண்ணீர் வரும் குழாய்கள் அவ்வப்பொழுது சுத்தம் செய்யப்படுமா ?

    என்றெல்லாம் இந்த தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர்கள் ஏதேனும் சொல்லுவார்கள் அல்லது தேர்தலில் ஜெயித்தவர்கள் செய்வார்கள்    என எதிர்பார்க்காதீர்கள். ஏமாந்து போகாதீர்கள்.

    இந்த தேர்தலின் நோக்கம் அரசியல் கட்சிகளின் பலப்பரிட்சை. அதை வைத்து அடுத்த     மக்களவை தேர்தலில் சீட் பேரம், கூட்டணி அமைப்பு. 

    அதுவே !!

     பாவம் மக்கள்.

ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். நீங்களும் நானும் வோட் போடாமல் இருந்தாலும் பயன் எதுவும் இல்லை. அதனால் கவனமாக ஒட் அளியுங்கள். 
சிங்கார சென்னை வேண்டாம். சுத்தமான சென்னை வேண்டும்.

    கட்சி அரசியல் உள்ளாட்சி தேர்தலில் வேண்டாம் என்று சொல்கையில் , கட்சி சார்பாக நிற்பவர்களுக்கு வோட் போடவேண்டாம் என்று நான் சொல்லவில்லை.  
அவர்களில் யார் , உண்மையாக மக்களுக்காக, உள்ளாட்சி பணம் மக்கள் நலனுக்காகத்தான் செல்வளிக்கபடுகிறதா என மனசாட்சியுடன் செயல் படுவார்கள் என உங்களுக்குத் தோன்றுகிறதோ அவர்களுக்கு வாக்கு அளியுங்கள். 


     இந்த சென்னை சுத்தமாக சுகாதாரமாக நிலவுவது உங்கள் கையிலே தான் இருக்கிறது.