Tuesday, February 25, 2014

ஆண்களைப் பற்றிய பெண்கள் புரிதல்பெண்களுக்கு உண்மையாக பிடித்தது என்ன ?

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’

காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது.

Paeco Underhill என்ற ஒரு மனோதத்துவ வல்லுநர் தனது அண்மையில் வெளியான ஒரு புத்தகத்தில் எழுதியவற்றை எனது அந்தக்கால நண்பர் திரு ராகவசாமி அவர்கள் ஒரு இ மெயிலில் அனுப்பி இருக்கிறார்கள்.

பேகோ அண்டர்ஹில் அவர்கள் என்ன துறை சார்ந்தவர்? அவர் ஆய்வுகள் எதை இலக்காக் கொண்டவை ? அவர் சாதனை என்ன என்றெல்லாம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக்குக.

குறிப்பாக அவர் சொல்லுவதெல்லாம் இதுவே:

பெண்களைப் பற்றிய ஆண்களின் புரிதல் சரி இல்லை. ஒரு 20 பர சென்ட் கூட இவர்களுக்கு தத்தம் வீட்டுப் பெண்டிரைப் பற்றியே புரிதல் உகந்ததாக இல்லை.

அதே சமயம் ஆண்களைப் பற்றிய பெண்கள் புரிதல் 75 விழுக்காடுக்கு மேல் சரியாக இருக்கிறது. 


“பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’
என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர்.
 அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் வெறுப்படைகின்றனர்!’

என்கிறார் பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர்,
 We live in a world that is owned by men, designed by men, and managed by men – and yet we expect women to be active participants in it.”-- Paco Underhill
“வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார்.
இதோ அந்த விஷயங்கள்:
1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும். என்ன பிரச்னை வரும் நன்றாகவே அவர்களுக்குத் தெரியும் 


2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?


3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமாவில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரிசமமாக நடத்த வேண்டும்.


4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண்டும். உள்ளாடை வெளியே தெரியும்படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷோகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.]

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக்கிறது, “டிவி’ யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.


பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற்றோரோ, குழந்தைகளோ நிறைவேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.
Sent from my Smartphone
by my old friend Sri K.Raghavasamy,Karaikkal.

இந்த மனோ தத்துவ நிபுணர் கூறியவற்றில் எது எது நீங்கள் ஒப்புக்கொள்ளக் கூடியது ?

 முதலில் உலகில் தமிழ் உலகில் ஊடகங்கள் மூலம் எல்லோருக்கும் அறிமுகமான பெண் உரிமை, மற்றும் பெண்கள்  மன நலம் குறித்து பேசுபவர்கள் சமூக சிந்தனையாளர்கள் பார்வையாளர்கள் திருமதி ஓவியா, திருமதி டாக்டர் ஷாலினி போன்ற வர்களது கருத்துக்களை பார்ப்போம் என்று முதலில் நினைத்தேன்.

பிறகுதான் , அனுபவம் மிகவும் பெற்ற சக வலைப் பதிவாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது தான் சாலச் சிறந்தது என்று தோன்றியது.

நமக்கு வேண்டியது ப்ரொபசனல் அட்வைஸ் அல்ல. யதார்த்த நிலை என்ன ?
என்பது தானே ?

எனக்கு அறிமுகமான பெண் பதிவாளர்கள் என்ன சொல்கிறார்கள்.?
 அவர்களது எக்ஸ்பர்ட்ஸ் ஒபினியன்ஸ் என்ன என்ன ?
இவர்களது பார்வையில் எழுதியவை படுமா என்று தெரியவில்லை.

+Ramalakshmi Rajan
+Ranjani Narayanan
+Geetha Sambasivam
+Thenammai Lakshmanan 
+Gomathy Arasu
+rajalakshmi paramasivam
+raji venkat
+பார்வதி இராமச்சந்திரன்.
+Mythily kasthuri rengan
+Mathangi Mathangi
+Gayathri S 
+Ananya Mahadevan
+Tulsi Gopal
+Susila Marees
+Shylaja Narayan
+revathy rkrishnan
+jayagowri suryanarayanan
+sudha narayanan
+priyadontics Deepapriya
+Priya Baskaran 
+Viji Ganesan
இந்த லிஸ்டில் விட்டுப்போயிருந்தாலும் நீங்கள் பின்னோட்டம் இடலாம். அல்லது எனது இ மெயில் க்கு கருத்துக்களை அனுப்பலாம்.


ஆண்களும் கருத்து சொல்லுங்கள். உங்கள் மனைவி என்ன நினைக்கிறாள் என்றும் சொல்லுங்கள். 

Sunday, February 23, 2014

கரந்தை ஜெயக்குமார்: மொழியும் வாழ்வும்

இன்று நீங்கள் படிக்கவேண்டிய வலைப்பதிவு. கரந்தை ஜெயக்குமார்: மொழியும் வாழ்வும


இப்பதிவின் ஒவ்வொரு வாக்கியமும்
ஒவ்வொரு வார்த்தையும்
இல்லை,
ஒவ்வொரு எழுத்துமே
நெஞ்சை ஊடுருவிச் சென்று
இதயச் சுவர்களை
இனிக்கச் செய்கிறது .
சில செய்திகள் இதயத்தைக்
கனக்கவும் செய்கின்றன.
வரதட்சணை கொடுமை பற்றிய
நாட்டுப்புற பாடல் இயற்றியது யார் ?
எனத் தெரியவில்லை.

யாராக இருந்தாலும்
வாயாரப் போற்றத்தக்கவர்.

வள்ளுவர் என்ன சொன்னார் ?
திருக்குறளைப் படித்தால்
என்ன கிடைக்கும் ?

உடன் செல்லுங்கள் .இங்கே:


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது
இன்றைக்குச் சாதாரணமான வரியாக இருக்கலாம். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கூட அது
கடினம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று
வள்ளுவர் சொன்னாரென்றால், உண்மையிலேயே உலகத்தின், முதல் புரட்சியாளராக, நான்
வள்ளுவரைப் பார்க்கிறேன்
.

Saturday, February 22, 2014

பாரதி கண்ட தமிழ்த் தாத்தா.

 எதுவுமே எவருமே அருகில் இருக்கையிலே அருமை தெரிவதில்லை.
அதை இழந்தபின்பு தான் அதன் அருமை தெரிகிறது.
அது போலவே, சான்றோர் பலர் அவர் தம் வாழ்நாளிலே அதிகம் போற்றப்படுவது இல்லை. அவரது சிறப்பும் ஆற்றிய பணியும் தொண்டும் அவர் உடலை நீத்து வெகு காலம் கழிந்தபின்பு தான் தெரிய வருகிறது.

பாரதி இதற்குத் தக்கதோர் சான்று.
அந்த பாரதி,  மீசை வச்ச முண்டாசுக்கவி,
தமிழ்த்தாத்தா என நாம் போற்றும் உ.வே.சுவாமிநாத அய்யர் பற்றி அழகான ஒரு பாடலை இயற்றி இருக்கிறார்கள்.

இப்பாடலை இன்று தான் நான் சதங்கா அவர்கள் வலையிலே பார்த்தேன்.
அதை எனது வலை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவேன் .

சதங்கா அவர்களுக்கு எமது நன்றி.
 (சதங்கா வலைக்குச் செல்ல மேலே கிளிக்கவும்)

நீங்கள் இனி படிப்பது சதங்காவின் எழுத்துக்கள்.
தமிழ்த் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் உ.வே.சா. அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணி அளவிடற்கரியது.   ஒரு படைப்பாளியையே நாம் காலம் கடந்து தான் போற்றுகிறோம்.  பாரதி வாழ்ந்த வரை அவருக்கு மலை போல குவிந்தன அவமானங்களே.  அப்படியிருக்க, மற்றவரின் படைப்புகளை, அதுவும் பல்லாண்டு கால முந்தையவற்றை, சுவடியிலிருந்து அச்சுக்குக் கொண்டு வந்தவரை, நாம் பாராட்டியா புகழ்ந்திருப்போம் ?!!  ஆனால், உ.வே.சா. அவர்களை பாரதி புகழ்ந்திருக்கிறார்.


நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
     இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம்  என்று மனம் வருந்தற்க
     குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
     காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
     இறப்பின்றி துலங்குவாயே.

உ.வே. சுவாமிநாத  ஐயரது வாழ்வே தமிழுக்கு அவர் செய்த தொண்டின் சரித்திரமாக விளங்குகிறது.  அவர் தம் ஆய்வுகளைப் பற்றி மேலும் அறிய  சொடுக்குக இங்கே.http://en.wikipedia.org/wiki/U._V._Swaminatha_Iyer

Thursday, February 20, 2014

NEUTRAN STAR SPEEDING FROM 2.5.MILLION TO 5 MILLION mph

விண்வெளியில் 2.5 மிலியன் மைல்கள் வேகத்தில் பறந்து போகும் ஒரு ந்யூட்ரான் நக்ஷத்திரம்.

நாசா செய்திளை படித்து மேலும் விவரங்கள் அறிந்து கொள்ளவும்.
  •  
  •  
  • RUN AWAY PULSAR WITH SPEED OF 2.5 மில்லியன் மைல் 
  • (மேலே க்ளிக்கிட்டு விவரங்கள் அறிந்து கொள்க.)
  • A runaway pulsar with an extraordinary jet trailing behind it has been found.

  • This pulsar - a spinning neutron star - is moving between 2.5 million and 5 million miles per hour.

  • Behind the pulsar there is a tail that stretches for 37 light years, making it the longest X-ray jet ever seen from an object in the Milky Way.

  • This tail has a corkscrew pattern, indicating that the pulsar is wobbling like a top as it spins.

Wednesday, February 19, 2014

பரியினும் ஆகாவாம் பாலல்ல

பரியினும் ஆகாவாம் பாலல்ல 
  உய்த்துச் சொரியினும் போகாதம


என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப,

நமக்கென்று எது உள்ளதோ
அது நம்மை எப்படியும் வந்து சேரும்.

அதை யாரும் எடுத்துச் செல்ல போக இயலாது
அதே போல உனக்கில்லாததை
 நீ உனது என்று நினைத்து எடுத்து வந்திருந்தாலும்
அது உனக்குப் பயன் படாது.

எனும் கருத்தமைந்த ஒரு வலைப்பதிவு
இன்றைய வால் போஸ்டர்  முதன்மைச் செய்தி. 

இது ஒரு ஆங்கில வலைபதிவு. ஆவிஸ்  .
மேலே சொடுக்கிடவும்.
செல்லுங்கள் படித்துப்பயன் பெறுங்கள்.

Whatever’s yours will come to you – no matter what!

Nobody can take away what is due to you and nothing can help you get what’s not meant for you! This is an unalterable Law of Life!


Tuesday, February 18, 2014

மறவாது எழுதுங்கள் மரபில் கவிதை

புலவர் இராமானுசம் தமிழ் வலை உலகில் மூத்த பதிவர்.  ஒரு கணமதில் ஒரு நூறு கவிதைகள் எழுதும் அதுவும் மரபுக் கவிதைகள் எழுதுவதில் தமிழ் இலக்கியத்திற்கு புகழ் சேர்ப்பதில் முன் அணியில் உள்ளார்.  இவரை அருகில் காண்பதற்கு அவருடன் உரையாடுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவரது கவிதை இது.
செம்மொழி தமிழில் மரபுக் கவிதைகளின் சிறப்பினை நயமாக எடுத்துரைக்கிறார் .
கவிதை முழுவதையும் படித்திட அவரது வலை இங்கே 
அவரது வலை பாடலை கேட்டிட இங்கே சொடுக்குங்கள்.
சுப்பு தாத்தா பாடகர் அல்ல. இருப்பினும். இக்கவிதையை ஷண்முக பிரிய , ஹிந்தோளம் எனும் இரு ராகங்களில் பாட முயன்று இருக்கிறார்.

Monday, February 17, 2014

சரஸ்வதியே மீசை வச்சுக்கிட்டு உருவிலே வந்த Rajesh Vaidhya அற்புதமாக வர்ணனை செய்பவர் எனது வலை நண்பர்
அகில உலக தமிழ் வலை தலைவி
திருமதி துளசி கோபால் அவர்கள்.
இவர்கள் வலைக்குச் செல்ல மேலே சொடுக்குங்கள்.

கீழே நீங்கள் படிப்பது அவர்களது எழுத்து.

நன்றி: திருமதி துளசி கோபால் அவர்களே .

ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை. என்ன அற்புத வாசிப்பு! அந்த சரஸ்வதியே மீசை வச்சுக்கிட்டு வாசிச்சாளோ? தன்னுடைய குருநாதருக்குத் தன் வணக்கத்தையும் நன்றியையும் சொன்ன கையோடு, குருநாதர் கம்போஸ் செஞ்ச குயில் பாட்டு ஒன்னு வாசிச்சார் பாருங்க....


ஹைய்யோ!!!! வீணை பேசும் என்பார்கள். சரி. குயில் போலும் கூவுமோ!!!! 

 மனசை இழுத்துப்பிடிச்சு  வீணையில் லயிக்கவிட்டேன்.  சொல்லவிட்டுட்டேனே.... கடவுள் வாழ்த்துப்பாடிய இளைஞி,  வீணை வாசிப்பு முழுசுக்கும் பக்கவாத்தியமா புல்லாங்குழல்  வாசிச்சு அமர்க்க்களப்படுத்திட்டார். நல்ல எதிர்காலம் அமையட்டுமுன்னு மனசார வாழ்த்தினேன், மனசுக்குள். (ஏன் அவர் பெயரை பேனரில் போடலை? )
ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை.  என்ன அற்புத வாசிப்பு!  அந்த சரஸ்வதியே  மீசை வச்சுக்கிட்டு வாசிச்சாளோ?

உண்மைதான். சரஸ்வதி தேவி கடாக்ஷம் பரிபூர்ணமா இருந்தால் தானே இப்படி ஒரு சாதகம் சாத்தியம் !!

Saturday, February 15, 2014

வாசகர் கூடம் எனும் புதிய வலையில்

வாசகர் கூடம் எனும் புதிய வலையில்
(மேலே சொடுக்குங்கள்)
இன்று ஆதி வெங்கட் எழுதும் 
மதிப்புரை. 

படிக்கத் தவறாதீர்கள்.
http://vasagarkoodam.blogspot.com/
அப்பதிவில் இருந்து
ஒரு சில வாக்கியங்கள் மட்டும் கீழே :

 “வாழ்க்கைங்கறது எழுத்தாளர்கள் கற்பனைல உருவாக்கற நாவலோ, இல்லை பூதாகாரப் பொய் வடிவமான சினிமாவோ இல்லை. அது யாருமே நினைச்சுப் பார்க்காத திசையிலும் மேடு பள்ளங்களிலும் நம்மை இழுத்துகிட்டுப் போற ஒண்ணு. நாமளும் அது இழுப்புக்கு போய்த்தான் தீரணும். நாவல்லயும், சினிமாவுலையும் தான் நாம விரும்புற முடிவுகள் நமக்குக் கிடைக்கும். வாழ்க்கைல அப்படிக் கிடையாது.”
இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:- திருவரசு புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 17. ஏப்ரல் 2001 ஆண்டு பதிப்பின் படி 248 பககங்கள் கொண்ட இதன் விலைரூ 65.
மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட், திருவரங்கம்.

+Adhi Venkat 
+Balasubramanian Ganesh 

Thursday, February 13, 2014

மனதை அல்ல, மனச் சாட்சியை உலுக்க வல்ல பதிவு இது.

என் பெயர் மரியாட்டு....
        பேசப் பேச, இறுகிப் போயிருந்த மரியாட்டுவின் நினைவுகள், அருவியாய் கொட்டத் தொடங்கின. கிட்டத் தட்ட பத்து மணி நேரம், புரட்சிக் காரர்களிட்ம் பிணைக் கைதியாய் சிக்கியிருந்தது, கேலியும் கிண்டலுமாய் துண்டிக்கப் பட்ட கைகள், ரத்தம் கசியக் கசிய, காடும் மேடும் ஓடிக்கொண்டேயிருந்தது என மூச்சு விடாமல் பேசினார்.
    மேலே படிக்க இங்கே சொடுக்குங்கள். 
Thank U 
மனதை அல்ல, மனச் சாட்சியை உலுக்க வல்ல பதிவு இது. 
கரந்தை ஜெயகுமார் அவர்களை என்ன பாராட்டினாலும் தகும்.

சிரியா லியோன் என்னும் நாட்டில் 2000 ஆண்டு வாக்கில் நடந்த நிகழ்வு. 
இன்றும் கண்களுக்கு முன்னே நடப்பது போல இருக்கிறது. 
இதயத்தில் இருந்து இரத்தம் வடிகிறது. 
இது போன்றா ஒரு கொடுமை !!!
இந்த கோர நிகழ்வு இங்கும் வர்ணிக்கப்படுகிறது.  
 courtesy: www.dailymail.co.uk
‘Which hand do you want to lose first?’ he asked.
The knot in my throat gave way to a scream. ‘No,’ I yelled. I started running, but it was no use. The older rebel caught me, his big arm wrapping around my belly. He dragged me back to the boy rebels and threw me to the ground. Three boys hauled me up by the arms. I was kicking now, screaming, and trying to hit. Gunfire filled the night. ‘Allah, please let one of the bullets stray and hit me in the heart so I may die,’ I prayed.
‘Please, please, please don’t do this to me,’ I begged one of the boys. ‘I am the same age as you. Maybe we can be friends.’
‘We’re not friends,’ the boy scowled, pulling out his machete.
‘If you are going to chop off my hands, please just kill me,’ I begged them.
‘We’re not going to kill you,’ one boy said. ‘We want you to go to the president and show him what we did to you. You won’t be able to vote for him now. Ask the president to give you new hands.’
I didn’t feel any pain. But my legs gave way. I sank to the ground as the boy wiped the blood off the machete and walked away. As my eyelids closed, I saw the rebel boys giving each other high fives. I could hear them laughing. As my mind went dark, I remember asking myself: ‘What is a president?’ 

Wednesday, February 12, 2014

மஞ்சுபாஷினிக்கு நன்றி.வலைச்சரத்தில் இன்று ஆசிரியர் திருமதி மஞ்சு பாஷிணி அவர்கள்
சுப்பு தாத்தாவை அறிமுகம் செய்து கௌரவம் செய்து இருக்கிறார்கள்.
அவர்களுக்கு  நன்றி.

தாங்க்ஸ். தாங்க்ஸ்.

 மஞ்சு பாஷிணிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எல்லாம்  அருள திருப்பதி மலைவாசனை ஏழுமலையானை பாலாஜியை ஸ்ரீனிவாசனை திருவேங்கடமுடையானை வேண்டி நிற்பேன்.

சுப்பு தாத்தாவுக்கு வயசு 10 தானாம். மஞ்சு சொல்றாங்க. !!!

அடே !! ஆமாம். .!!
திருச்சி,இ. ரெ .உயர்நிலைப்பள்ளியில் ஓபனிங் பேட்ஸ் மேன் நான் தானே
1953 லே !!
 

Sunday, February 9, 2014

உணவுஉலகம்: கன்சர்ட் அமைப்பின் பிஸ்கட் குறித்த அறிக்கை.

உணவுஉலகம்: கன்சர்ட் அமைப்பின் பிஸ்கட் குறித்த அறிக்கை.

PLEASE CLICK AT THE ABOVE AND READ THE ARTICLE IN FULL.DO THE BISCUITS WE EAT EVERYDAY REALLY WORTH WHAT THEY SAY AT THE WRAPPER COVFER !!An article published in the blog

UNAVU ULAGAM.THANKS FOR THE AUTHOR OF THE BLOG.PLEASE CLICK AT THE URL ABOVE AND DO READ.Thursday, February 6, 2014

Anbha Azhaga - Kannadi Poopole featuring Parvathy OF SUPER SINGER FAME.


SUPER SINGER PARVATHY HAS HER FIRST SONG IN THE FILM. WHAT A FINE CARNATIC 
MELODY !! SUPERB !!

 KEEP GOING. PARVATHY.   YOUR VOICE RECALLS MEMORIES OF VANI JAYARAM , PARVEEN SULTHANA 
AND GEETHA DUTT.