. நாட்டில், நமது மாநிலத்தில், ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டே இருக்கின்றன. எதாவது ஒரு நிகழ்வு குறித்தும் போராட்டங்கள், திடீர் சாலை மறியல்கள் நடக்கின்றன. விழிப்புணர்வு ஊர்வலங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. அண்மையில் லஞ்சத்தை எதிர்த்து, அண்ணா ஹஜாரே வை ஆதரித்து ஊர்வலங்கள் மெழுகுவத்தி கையில் ஏந்தி நடக்கின்றன. அவ்வப்போது பல நகரங்களில் மருத்துவ அகங்களில் ஏற்படும் கவனிப்பின்மை காரணமாக ஏற்படும் இறப்புகளை கண்டித்தும், சாலை விபத்துகளில் ஏற்படும் சாவுகளைக் கண்டித்தும் சாலை மறியல்கள் நடக்கின்றன.
இத்தனை எதிர்ப்புகள் மக்களின் உணர்வுகளை எடுத்துச் சொல்லுகின்றபோதிலும் அரசாங்க அலுவலர்கள் உரிய கவனம் செலுத்துகிறார்களா ?
சுத்தத்தைப் பற்றி சுகாதாரத்தைப் பற்றி பேசுகிறோம். இருப்பினும் சாலையின் இரு பக்கங்களிலும் தினந்தோறும் சேரும் சாக்கடை கழிவுகளையும், குப்பைகளையும் அகற்றுகிறார்களா என்றால் இல்லை. அவை அங்கே சேர்ந்துகொண்டே போய், அதற்குப் பக்கத்திலே கையேந்தி பவனகள் பவனி வருகின்றன.
உதாரணமாக, வளசரவாக்கம் சென்னை ராதாக்ருஷ்ணன் சாலையில் பெரியார் பூங்காவுக்கு எதிரே குப்பைகளை மலை போல குவித்து இருக்கிறார்கள். சாக்கடை கழிவுகளும், ஆங்கங்கே வீடுகள் இடிக்கப்பட்ட கல், மண் யாவும் இவையில் கலந்து மழை நீர் கலந்து ஒரு பெரிய மேடு போல காட்சி அளிக்கிறது.
கொசுத் தொல்லையும் அதிகரித்து உள்ளது.
மருத்துவர்கள் அலுவகங்களில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மருந்துக் கடைகளில் பல்வேறு வியாதிக்கான மருந்துகள் பலசரக்கு போல விற்பனை ஆகிறது.
சுத்தம், சுகாதாரம் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு நகராட்சி, சென்னை அரசு இவற்றில் மேல் பதவிகள் வகிக்கும் அலுவலர்களுக்கு என்று ஏற்படும் !!
அன்றாடம் வீதிகளில் உள்ள சாக்கடை கழிவுகளையும் குப்பைகளையும் அகற்ற வேண்டும் என்ற கடமை உணர்வு என்றுதான் ஏற்படும் ??
நகராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் இதற்கான முயற்சிகள் எடுப்பார்களா ?
No comments:
Post a Comment