LIFE HAS NEVER BEEN BLANK.. THE LONG ROAD I TRAVELLED, THE MEN AND WOMEN FROM WHOM I LEARNT A LOT, I NOW RECOLLECT. WITH A SENSE OF GRATITUDE THAT HELPS ME TO LIVE IN PEACE WITH MYSELF.
Wednesday, August 22, 2012
Tuesday, October 11, 2011
இந்த உள்ளாட்சித் தேர்தல் பொது மக்களுக்கு என்ன செய்யப்போகிறது ?
செப்டெம்பர் 2011வளசரவாக்கம் செய்தி மடல் என்னும் பத்திரிகையில் வந்திருப்பது மேலே காண்க.
இந்த உள்ளாட்சித் தேர்தல் பொது மக்களுக்கு என்ன செய்யப்போகிறது ? வீதிகள் சுத்தமாக இருக்கப்போகிறதா ? மலை போல் குவிந்து துர் நாற்றம் வீசும் வீதியிலே அன்றாடம் குப்பைகள், சாக்கடை கழிவுகள் அகற்றப்பட போகின்றனவா ? வீதிகளின் இருபக்கங்களிலும் கையேந்தி பவன்கள் கொட்டும் மிச்ச் மீதி உணவுப் பொருட்களைத் திங்கும் நாய்கள் தொந்தரவிலிருந்து பொது மக்கள் காப்பாற்றப்படுவார்களா ?
கொசுத்தொல்லை பரவா வண்ணம் ஒரு தடுப்பு நடவடிக்கை ஏதும் நடைபெறப்போவதா ?
மருத்துவகங்கள் சீர் படுத்தப்படுமா ? அங்காவது சுத்தம் இருக்குமா ?
தண்ணீர் வரும் குழாய்கள் அவ்வப்பொழுது சுத்தம் செய்யப்படுமா ?
என்றெல்லாம் இந்த தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர்கள் ஏதேனும் சொல்லுவார்கள் அல்லது தேர்தலில் ஜெயித்தவர்கள் செய்வார்கள் என எதிர்பார்க்காதீர்கள். ஏமாந்து போகாதீர்கள்.
இந்த தேர்தலின் நோக்கம் அரசியல் கட்சிகளின் பலப்பரிட்சை. அதை வைத்து அடுத்த மக்களவை தேர்தலில் சீட் பேரம், கூட்டணி அமைப்பு.
அதுவே !!
பாவம் மக்கள்.
ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். நீங்களும் நானும் வோட் போடாமல் இருந்தாலும் பயன் எதுவும் இல்லை. அதனால் கவனமாக ஒட் அளியுங்கள்.
சிங்கார சென்னை வேண்டாம். சுத்தமான சென்னை வேண்டும்.
கட்சி அரசியல் உள்ளாட்சி தேர்தலில் வேண்டாம் என்று சொல்கையில் , கட்சி சார்பாக நிற்பவர்களுக்கு வோட் போடவேண்டாம் என்று நான் சொல்லவில்லை.
அவர்களில் யார் , உண்மையாக மக்களுக்காக, உள்ளாட்சி பணம் மக்கள் நலனுக்காகத்தான் செல்வளிக்கபடுகிறதா என மனசாட்சியுடன் செயல் படுவார்கள் என உங்களுக்குத் தோன்றுகிறதோ அவர்களுக்கு வாக்கு அளியுங்கள்.
இந்த சென்னை சுத்தமாக சுகாதாரமாக நிலவுவது உங்கள் கையிலே தான் இருக்கிறது.
Saturday, September 10, 2011
Filth, Garbage and Sewage Hills at Valasaravakkam.
. நாட்டில், நமது மாநிலத்தில், ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டே இருக்கின்றன. எதாவது ஒரு நிகழ்வு குறித்தும் போராட்டங்கள், திடீர் சாலை மறியல்கள் நடக்கின்றன. விழிப்புணர்வு ஊர்வலங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. அண்மையில் லஞ்சத்தை எதிர்த்து, அண்ணா ஹஜாரே வை ஆதரித்து ஊர்வலங்கள் மெழுகுவத்தி கையில் ஏந்தி நடக்கின்றன. அவ்வப்போது பல நகரங்களில் மருத்துவ அகங்களில் ஏற்படும் கவனிப்பின்மை காரணமாக ஏற்படும் இறப்புகளை கண்டித்தும், சாலை விபத்துகளில் ஏற்படும் சாவுகளைக் கண்டித்தும் சாலை மறியல்கள் நடக்கின்றன.
இத்தனை எதிர்ப்புகள் மக்களின் உணர்வுகளை எடுத்துச் சொல்லுகின்றபோதிலும் அரசாங்க அலுவலர்கள் உரிய கவனம் செலுத்துகிறார்களா ?
சுத்தத்தைப் பற்றி சுகாதாரத்தைப் பற்றி பேசுகிறோம். இருப்பினும் சாலையின் இரு பக்கங்களிலும் தினந்தோறும் சேரும் சாக்கடை கழிவுகளையும், குப்பைகளையும் அகற்றுகிறார்களா என்றால் இல்லை. அவை அங்கே சேர்ந்துகொண்டே போய், அதற்குப் பக்கத்திலே கையேந்தி பவனகள் பவனி வருகின்றன.
உதாரணமாக, வளசரவாக்கம் சென்னை ராதாக்ருஷ்ணன் சாலையில் பெரியார் பூங்காவுக்கு எதிரே குப்பைகளை மலை போல குவித்து இருக்கிறார்கள். சாக்கடை கழிவுகளும், ஆங்கங்கே வீடுகள் இடிக்கப்பட்ட கல், மண் யாவும் இவையில் கலந்து மழை நீர் கலந்து ஒரு பெரிய மேடு போல காட்சி அளிக்கிறது.
கொசுத் தொல்லையும் அதிகரித்து உள்ளது.
மருத்துவர்கள் அலுவகங்களில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மருந்துக் கடைகளில் பல்வேறு வியாதிக்கான மருந்துகள் பலசரக்கு போல விற்பனை ஆகிறது.
சுத்தம், சுகாதாரம் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு நகராட்சி, சென்னை அரசு இவற்றில் மேல் பதவிகள் வகிக்கும் அலுவலர்களுக்கு என்று ஏற்படும் !!
அன்றாடம் வீதிகளில் உள்ள சாக்கடை கழிவுகளையும் குப்பைகளையும் அகற்ற வேண்டும் என்ற கடமை உணர்வு என்றுதான் ஏற்படும் ??
நகராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் இதற்கான முயற்சிகள் எடுப்பார்களா ?
Subscribe to:
Posts (Atom)