கடந்த சில நாட்களாக,
எனது வலை நண்பர்கள் எழுதும் பதிவுகளுக்கு நான் போடும் பின்னூட்டங்கள் வெளியாவதில்லை.
முதலில் இதை நான் வலை நண்பர்கள் மட்டறுத்தல் அதாவது moderation of comments என்று நினைத்து இருந்தேன்.
வீடு திரும்பல்
மோகன் குமார் அவர்களின் உயில் என்னும் பதிவில் எனது பின்னூட்டங்கள், வெளியாகவில்லை. பின்,
வலைச்சரத்திலே எனது வலை அறிமுகம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒன்று இட்டதும்,
காணாமற் போன கனவுகள் என்ற பதிவிலும் நான் இட்ட பின்னூட்டங்களும் காணாமற் போய்விட்டன.
எல்லா பதிவர்களுக்கும் எனது நிலை தானா ?
நேற்று, எனது வலைப்பதிவு www.subbuthatha72.blogspot.in பின்னோட்டம் அளித்திருந்த பலருக்கு பதில் போடவும் முடியவில்லை. திரு.ஆவி. திருமதி கீத மஞ்சரி, திரு துரை செல்வராஜ், திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் இட்ட பின்னூட்டங்களுக்கு நான் நன்றி சொல்ல முடியவில்லை.
எனது வலை கூகிள் + இணைத்திருப்பதால் இந்த பிரச்னை என்று சொல்லவும் முடியவில்லை.
ஆயினும், கூகிள் + இணைந்தவர்கள் தான் கூகிள் + இணைந்தவர்கள் வலைப்பதிவுகளுக்கு பின்னூட்டம் அளிக்க இயலும் போல தோன்றுகிறது.
ஒருவர் கூகிள் + இனையாவிடினும் பின்னோட்டம் இடவோ அல்லது பின்னூட்டத்திற்கு தமது வலையிலே பதில் சொல்லவோ முடியாது எனவும் தெரிகிறது.
இந்த பிரச்னைக்கு எதாவது தீர்வு இருக்கிறதா என கூகிள் லே தேடினால்,
ஒருவர் சொல்கிறார்: இது ப்ரௌசர் பிரச்னை. அதாவது, பயர் பாக்ஸ் உபயோகித்து நான் வலைக்குள் சென்றால், கூகிள் கறோம் ஐ அல்லது எக்ஸ்ப்ளோரர் உபயோகித்து வலைப்பதிவு செய்தவர் பதிவுக்கு பின்னோட்டம் இடம்முடியாது என்று.
இது அவ்வளவு சரியான பதில் எனச் சொல்ல இயலவில்லை.
இது பற்றி, குறிப்பாக, வேலன் அவர்கள், திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கருத்து தெரிவித்தால் நல்லது.
கூகிள் ப்ளஸ் இருந்து வெளியேறினாலும் இந்த பிரச்னை தீராது என்றே தெரிகிறது.
மற்றும், இந்த பிரச்னை எனக்கு மட்டும்தானா , இல்லை, மற்றவர்களுக்கும் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.
எனக்கே இப்படி என்றால்,
தினசரி ஒரு நூறு கமெண்ட்ஸ் போடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்வார்கள். ?
பெருமாள் காப்பாத்துவார் .
இருந்தாலும்,
எனக்கு ஒரு உண்மை தெரியனும்ங்க்.