Monday, March 31, 2014

சுந்தர தெலுங்கினில்.. HAPPY TELUGU NEW YEAR



சுந்தர தெலுங்கினில் ஒரு பாட்டு பாடி,
எல்லா தெலுங்கு நண்பர்களுக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறுவோம் .
Courtesy: www.viji -crafts, blogspot.com

Thank U Madam.
http://viji-crafts.blogspot.in/2014/03/happy-ugadhi.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+VijisCraft+(vijis+craft)

Sunday, March 23, 2014

ஆழ்வார் திருநகரிலே ஒரு இசைப் பள்ளி CHENNAI

subbu thatha has joined this Music School, as a student, of course.

HERE, WE FIND  DEDICATED TEACHERS CONDUCT CLASSES FOR 
KEYBOARD, GUITAR, DRUMS, VIOLIN AND CARNATIC VOCAL MUSIC TOO.




மேலும் விவரங்களுக்கு
கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


Wednesday, March 12, 2014

திடங்கொண்டு போராடு: ஜஸ்ட் ரிலாக்ஸ் - 12/03/2014

திடங்கொண்டு போராடு: ஜஸ்ட் ரிலாக்ஸ் - 12/03/2014

ஹெவியான ஒரு சமாசாரத்தை ஜஸ்ட் ரிலாக்ஸ் என்னும்
தனது வலையிலே மிகவும் அழகாக எழுதி இருக்கிறார்
திரு சீனு  அவர்கள்.

ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாத  ஆணும்,அந்த ஆணின் ஆதிக்கத்துக்கு
ஏதோ ஒரு வகையில் கட்டுப்பட்டு காலமெல்லாம் மனதிற்குள்ளே போராடும் ஒரு மெலிந்த உள்ளமுடைய பெண்ணையும் சித்தரிக்கும் வகையில்,

அண்மையில் வந்த ஒரு படம் கௌதம் மேனன் அவர்களது . அதற்கு மிதமான , மனதிற்கு இதமான ஒரு விமர்சனம் .

இந்த மையக்கருத்தில் பல கதைகள்,தொடர்  கதைகள்,ஏன் ? சில சீரியல்களும் வந்து  விட்டன.


அடுத்து, நண்பர் சீனுவின் பதிவில் சொல்லப்பட்ட வாசகர் கூடம் ஒரு வாயிற் கூடம் ஒரு தங்கச் சுரங்கத்திற்கு.

தமிழ் அன்பர்கள் அனைவருக்குமே.

இவர் பதிவிலே போட்டு இருந்த கோவிலின் நுழை வாயில் போன்றது.

உள்ளே போனால் தான்  வியக்கத்தக்க சிறப்புகள்  புலப்படுகின்றன.

வெளிலே நின்று கொண்டு உள் இருப்பது கல் என்று சொல்ல லாம்.

உள்ளே நுழைபவர்க்கோ தாம் கற்கவேண்டியவை ஏராளம் இருக்கின்றன என்று தெரிய வருகிறது.

பல நடவுகளில், நடப்பு ஒன்று தான். பார்வைகள் பல.

சீனுவுக்கு ஒரு சின்ன இல்ல, பெரிய நன்றி ஒன்று  சொல்லுவோம்.

Sunday, March 9, 2014

மது பனி இரண்டுமா !!

மதுபனி என்றால் ஏதோ ரொம்ப பனி கொட்டும்போது

ஒரு க்வார்ட்டர் மது ..  நோ.. நோ....

அந்த மது இருக்கிற ஜாருக்குள்ளேயே போய் உட்கார்ந்து

இருக்கணும்போல தோன்றுகிறது .

இப்ப இல்ல, அதுக்கெல்லாம் இப்ப வயசில்ல.

ஆனா, வலை நண்பர் தில்லி வேங்கடராஜ் அவர்கள்

பார்த்த மது பனி இரண்டுமே வேறு.
+Venkataraman Nagarajan
மதுபனி என்னும் ஊரிலே வண்ண வண்ண ஓவியங்களைப் பார்த்து ரசித்து மயங்கிய நிலையில்...

நண்பர்கள் நினைவு வர அந்த ஓவியங்களிலே சிலவற்றை தேர்ந்து எடுத்து நமக்காக தனது வலையிலே இட்டு இருக்கிறார்.

சென்று காணத் தவறாதீர்கள்.  மேலே சொடுக்கி செல்லுங்கள்.

திரு வேங்கட நாகராஜ் அவர்களுக்கு ஜே போடுவோம். 

ஒரு சாம்பிள் இங்கே.
மது பனி இரண்டுமா !!

Monday, March 3, 2014

நல்ல உள்ளம் உறங்காது

 இப்பூவுலகில் மனிதனாய்ப் பிறந்தவர்கள் பலர் , அன்றாட வாழ்க்கைக்கு பொருத்தமாக இலாத,   இந்த ஆன்மா பற்றிய சங்கதிகள், சொர்க்கம், நரகம் என்ற வாசகங்கள் பேத்தல் உடான்சு என்று சொல்கின்ற, நம்புகின்ற, அதையும் பிறர் நம்பும்படியாகச் செய்கின்ற  ,வேளையில்

வலை நண்பர் திரு தி. தமிழ் இளங்கோ அவர்கள் தனது வலையில் " நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு சொர்க்கம் நரகம் என்று ஏதேனும் உண்டா என்று கவலைப்பட்டு இருக்கிறார்.

இங்கு உள்ளது.
 http://tthamizhelango.blogspot.com/2014/03/blog-post.html#comment-form

சொர்க்கம் என்று இல்லை என வாதிடும் ஸ்டீபன் ஹாகிங் இங்கே

ஒரு நரம்பியல் நிபுணர் மருத்துவர் தனது சிந்தனைகளே பகிர்கிறார் இங்கே .
சொர்க்கம் இருக்கிறது போல் தான் தோன்றுகிறது. இவர் எண்ணங்களின் வலையிலே இங்கே 

இதை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி தள்ளி விட்டு, ஸ்வர்க்கத்தில் செக்ஸ் இருக்கா இல்லையா ? என்பது பீடர் க்ரீப்ட் அவர்களின் தொலை நோக்கு பார்வை.   கிளிக்குங்கள்.

அவரவர் கவலை அவருக்கு.  எனது சிகாகோ நண்பருக்கு  புரியும்.ரசிப்பார் கூட. 

நமது ஹிந்து மதத்தின் உட்கருத்துக்கள் என்ன ?
இங்கே ராமகிருஷ்ண விவேகானந்த நிலையம் நியூ யார்க் சொல்வது இங்கே

நமது பொய்யா மொழிப்புலவர் வள்ளுவர் கருத்துப்படி அவ்வுலகம் என்று ஒன்று இருக்கிறது.

அருள் இலார்க்கு அவ்வுலகம்  இல்லை
 பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு

 எனும் வள்ளுவனின் வாக்கினை பலர் பல முறை படித்திருந்தாலும்,

அதற்கும் ஒரு படி மேலே சென்று,

பொருளற்றார் பூப்பர் ஒருகால்
அருளற்றார்  மற்றாதல் அரிது

எனும் எச்சரிக்கை தனையும் துச்சமாக நினைத்து,

பொருள் இல்லையேல் இந்தப்புவியில் இனிதான ஒரு வாழ்வு இல்லை என ஒரு முடிவு செய்து  அந்தப் பொருளை எப்படியாவது ஈட்டிட, அந்தப் பொருள் தரும் புகழ் தனை பெற்றிட எந்த ஒரு பாவச் செயலையும் செய்ய முற்படும் இவ்வுலகத்தில்,

சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம் என்பதைப் பற்றி எல்லாம் சிந்தனை செய்ய நேரம் இல்லை, வந்தது வரட்டும் போடா என்று

இறுமாப்புடன் செயல் படும் இந்தக் காலத்தில்,

இதை எல்லாம் ஒரு பக்கம் தள்ளி விட்டு, தனது மனதிலே

நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் பற்றி கவலைப் படும் ஒரு நல்ல உள்ளத்தை பாராட்டாது இருக்க இயலாது.

வலை அன்பர் திரு தமிழ் இளங்கோ அவர்கட்கு,  இக்கருத்தை முன்வைத்தமை குறித்து பாராட்டுக்கள். எமது நன்றி.

ஒன்று கவனித்து இருக்கிறேன்.
 உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது நாம் கேட்ட பாடல் ஒன்று. இன்னமும் இதயத்தில் இனிக்கிறது.

தஞ்சையில், நாங்கள் இருந்த தெருவில், இருந்த நாய் ஒன்று, நான் அலுவலகத்தில் இருந்து வரும் வரையில் அது என் வீட்டு வாசலில் இருந்து காவல் காத்து நிற்கும். அதன் பிறகு தான் அதற்கு போடப்பட்ட உணவை சாப்பிடும். அதைக் கண்டு வியந்து இருக்கிறேன்.



இக்கட்டுரையை படிக்கும்பொழுது இன்னொரு காணொளி கண்ணில் பட்டது.
அதையும் படியுங்கள். பாருங்கள்.



நாம் சொர்க்கத்துக்கு போவோமா, நரகத்துக்கு போவோமா என்று அந்த நாள் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு நாள் இரவிலும் ஒரு நிமிடம் அந்த நாள் என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்த்தாலே நமக்கே புரிந்து விடும்.

அதே சமயம், நம்மிடையே நன்றி உணர்வினை எடுத்து காட்டும் நாய்களுக்கும்,
வெய்யில், மழை என்று பாராது சேற்றிலே வயலிலே அயராது உழைக்கும்
மாடுகளுக்கும்,
தான் பெற்ற கன்றுகளை விட, நமக்கு குடம் குடமாகப் பால் தரும் பசுக்களுக்கும்

சொர்க்கம்
நிச்சயம்.

Saturday, March 1, 2014

ஈரோட்டில் ஒரு விவசாயி பெண்மணி திருமதி கலைவாணி சாதனை

திருமதி கலைவாணி , ஈரோட்டில் ஒரு விவசாயி பெண்மணி, தனது நிலத்தில், எந்த வித மருந்துப் பொருட்களோ அல்லது ரசாயன உரங்கள் போடாமல் தனது உற்பத்தி திறனையும் அதிகரித்து கொள்வது மட்டும் அன்றி, தனது வருடாந்தர லாபத்தினையும் மூன்று பங்கு அதிகரித்து உள்ளார். 

இவர் தனது நிலத்திலேயே உற்பத்தி செய்யப்படும் பஞ்சகவ்யம், ஜீவாம்ருதம், அம்ருதக் கரைசல் என்னும் ஆர்கானிக் உரங்களை மட்டுமே பயன் படுத்துகிறார். 
 சாதனை புரியும் 
இவரது ஆற்றல் மிக்க வர்ணனையை கீழ்க்காணும் வீடியோவில் பார்த்து பயன் பெறவும். 
+
திருமதி கலைவாணி அவர்கள் இயற்கை உரங்கள் கொண்டு தனது லாபத்தை மூன்று பங்காக செய்து இருக்கிறார்.

Kalaivani, an organic farmer in Erode, explains the benefits of organic farming. Using inputs such as Panchagavya, Jeevamritham and Amrithakaraisal prepared in her farm, she is able to more than triple her profit margins when compared to using convetional chemical farming.

Category

Nonprofit
 Please cut and paste the URL below for further details.
http://www.thebetterindia.com/9412/video-kalaivani-used-organic-farming-triple-profits/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheBetterIndia+%28The+Better+India%29