Wednesday, March 12, 2014

திடங்கொண்டு போராடு: ஜஸ்ட் ரிலாக்ஸ் - 12/03/2014

திடங்கொண்டு போராடு: ஜஸ்ட் ரிலாக்ஸ் - 12/03/2014

ஹெவியான ஒரு சமாசாரத்தை ஜஸ்ட் ரிலாக்ஸ் என்னும்
தனது வலையிலே மிகவும் அழகாக எழுதி இருக்கிறார்
திரு சீனு  அவர்கள்.

ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாத  ஆணும்,அந்த ஆணின் ஆதிக்கத்துக்கு
ஏதோ ஒரு வகையில் கட்டுப்பட்டு காலமெல்லாம் மனதிற்குள்ளே போராடும் ஒரு மெலிந்த உள்ளமுடைய பெண்ணையும் சித்தரிக்கும் வகையில்,

அண்மையில் வந்த ஒரு படம் கௌதம் மேனன் அவர்களது . அதற்கு மிதமான , மனதிற்கு இதமான ஒரு விமர்சனம் .

இந்த மையக்கருத்தில் பல கதைகள்,தொடர்  கதைகள்,ஏன் ? சில சீரியல்களும் வந்து  விட்டன.


அடுத்து, நண்பர் சீனுவின் பதிவில் சொல்லப்பட்ட வாசகர் கூடம் ஒரு வாயிற் கூடம் ஒரு தங்கச் சுரங்கத்திற்கு.

தமிழ் அன்பர்கள் அனைவருக்குமே.

இவர் பதிவிலே போட்டு இருந்த கோவிலின் நுழை வாயில் போன்றது.

உள்ளே போனால் தான்  வியக்கத்தக்க சிறப்புகள்  புலப்படுகின்றன.

வெளிலே நின்று கொண்டு உள் இருப்பது கல் என்று சொல்ல லாம்.

உள்ளே நுழைபவர்க்கோ தாம் கற்கவேண்டியவை ஏராளம் இருக்கின்றன என்று தெரிய வருகிறது.

பல நடவுகளில், நடப்பு ஒன்று தான். பார்வைகள் பல.

சீனுவுக்கு ஒரு சின்ன இல்ல, பெரிய நன்றி ஒன்று  சொல்லுவோம்.

2 comments:

  1. இனிய நண்பர் சீனு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக்க நன்றி சுப்பு தாத்தா.. உற்சாகமா ஒரு பதிவே எழுதிட்டீங்க..

    ReplyDelete