அற்புதமாக வர்ணனை செய்பவர் எனது வலை நண்பர்
அகில உலக தமிழ் வலை தலைவி
திருமதி துளசி கோபால் அவர்கள்.
இவர்கள் வலைக்குச் செல்ல மேலே சொடுக்குங்கள்.
கீழே நீங்கள் படிப்பது அவர்களது எழுத்து.
நன்றி: திருமதி துளசி கோபால் அவர்களே .
ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை. என்ன அற்புத வாசிப்பு! அந்த சரஸ்வதியே மீசை வச்சுக்கிட்டு வாசிச்சாளோ? தன்னுடைய குருநாதருக்குத் தன் வணக்கத்தையும் நன்றியையும் சொன்ன கையோடு, குருநாதர் கம்போஸ் செஞ்ச குயில் பாட்டு ஒன்னு வாசிச்சார் பாருங்க....
ஹைய்யோ!!!! வீணை பேசும் என்பார்கள். சரி. குயில் போலும் கூவுமோ!!!!
மனசை இழுத்துப்பிடிச்சு வீணையில் லயிக்கவிட்டேன். சொல்லவிட்டுட்டேனே.... கடவுள் வாழ்த்துப்பாடிய இளைஞி, வீணை வாசிப்பு முழுசுக்கும் பக்கவாத்தியமா புல்லாங்குழல் வாசிச்சு அமர்க்க்களப்படுத்திட்டார். நல்ல எதிர்காலம் அமையட்டுமுன்னு மனசார வாழ்த்தினேன், மனசுக்குள். (ஏன் அவர் பெயரை பேனரில் போடலை? )
ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை. என்ன அற்புத வாசிப்பு! அந்த சரஸ்வதியே மீசை வச்சுக்கிட்டு வாசிச்சாளோ?
உண்மைதான். சரஸ்வதி தேவி கடாக்ஷம் பரிபூர்ணமா இருந்தால் தானே இப்படி ஒரு சாதகம் சாத்தியம் !!
ஹைய்யோ!!!!
ReplyDeleteஎன்ன தவம் செய்தேன் இவரைக் கேட்கன்னுதான்...அன்னிக்கு. தேன் குடிச்ச நரியை என்னில் கண்டேன்:-)
இன்று மீண்டும் ஒரு கப் தேன் கிடச்சது உங்களால்:-)
நன்றீஸ் ஐயா.
ஆமாம், மோகன் வைத்யா என்ன ஆனார்?
ReplyDeleteஸ்ரீ ராம், வாசிப்பது யாராம்?
Deleteமாஸ்ட்ரோ சிட்டி பாபு அவர்களின் வீணையின் நாதக்கு அடிமை நான். அவரின் மறைவுக்கு பிறகு அவரின் இசை வாரிசாக ராஜேஷ் வைத்யா அவர்கள் ஜொலிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைபவன். பகிர்வுக்கு நன்றி .
ReplyDelete