Saturday, September 20, 2014

வசந்த மண்டபம்:



காலை எழுந்தவுடன் ஒரு கவிதை.

அற்புதமான கவிதை ஒன்றினை இயற்றி தமது  வசந்த மண்டபத்தில் அரங்கேற்றியிருக்கிறார்

எனது வலை நண்பர் மகேந்திரன் அவர்கள்.

மடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

குறள் 624


அவரது மண்டபத்துக்குச் செல்லுங்கள்.
அந்த இனிய வசந்தத்தில் சற்று நேரம்
இளைப்பாறுங்கள்


வசந்த மண்டபம்: வேய்கூரை தார்மீகம்!!!

Thursday, August 28, 2014

vinayakar chathurthi. 29 august 2014


விநாயக சதுர்த்தியின் முக்கியத்தவத்தை இந்த வலைப்பதிவிலே பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் அவர்கள் 
உள்ளங்கை நெல்லிக்கனி போல் சொல்லி இருக்கிறார்கள்.
அவர்களுக்கு எமது நன்றி. 

அவர்களது வலையில் ஆன்மிகம், சோதிடம் இரண்டும் இடம் பெறுகிறது.
அந்த வலைக்கு செல்ல இது வழி. இங்கே கிளிக்கவும்.

ஆவணி மாதம் வரும் ’வளர்பிறை சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் விளையும்.






எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம். 



கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை 'கணபதி' என்று சொல்கின்றோம். எனவே, நாம் 'தேவ' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'மனித' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'அசுர' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும். 



அந்த ஆனைமுகனுக்கு உகந்த மாதம் தான் 'ஆவணி' மாதமாகும். அந்த திருநாள் ஆவணி மாதம் 13ம் தேதி வெள்ளி (29.08.2014) அன்று வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. 



மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். சாணத்திலும் காட்சி கொடுப்பார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். 







விநாயகர் விரதம்



1. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மஞ்சளையும் பிள்ளையாராக பிடிக்கலாம். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.



2. புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் 3 நாட்கள், 7 நட்களிலேயே கரைத்து விடுகிறார்கள்.



3. பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.



4. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.



5. விநாயக பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.



6. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.



7. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.



8. சூரசேனன் என்னும் மன்னன் இந்த விரதத்தைத் தான் கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.



சொல்ல வேண்டிய மந்திரங்கள்:

விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)



வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)



இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)



இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)



குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)



தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)



தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)



பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)



குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)



குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)



புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)



முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)

இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)



எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)



கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)



தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)


நன்றி;

Tuesday, June 17, 2014

புலவர் இராமானுசம் அவர்கள் தத்துவப்பாடல்


புலவர் இராமனுசம் அவர்களது தத்துவப் பாடல் இன்று . 

பிறக்கும்போது உன்னைச் சுற்றி இருக்கும் எல்லோரும் உன் ஜனனம் குறித்து உவகை கொள்கிறார்கள். சிரித்து மகிழ்கிறார்கள். நீயோ அழுகிறாய்.
நீ இறக்கும்போதோ உன்னைச் சுற்றி இருக்கும் எல்லோரும் அழ , நீ சிரிக்க வேண்டும் , மரணத்தில் இன்பம் காண விழைய வேண்டும் என் ஒரு உருது கவிஞ்ன் எழுதிவைத்தான்.

இன்று, எனது பெரு மதிப்புக்குரிய வலை நண்பர் புலவர் இராமனுசம் அவர்கள் எழுதிய பாடல், இப்புவியில் வாழ்வோர் அனைவருக்குமே ஒரு இலக்கணத்தை வகுக்கிறது.

எக்கருமங்களை நாம் செய்வின், தரணியில் நமது பெயர் நிலைத்து நிற்கும் ?

பாடலைப் படித்தபின், என்னால் பாடாது இருக்க இயலவில்லை.

Friday, May 16, 2014

இதோ ஒரு முருகன்”

Thillaiakathu Chronicles : “இதோ ஒரு முருகன்”, காக்கும் கடவுளாக அன்பே சிவமான எரணாகுளத்தப்பனின் மண்ணில்....!!

முருகன் எனப் பேர் கொண்டார்.
உள்ளம் உருகி நின்றார்.
உலகத்தோர் எல்லோருக்கும்
உதவி செய்ய முன்னே வந்தார்.

அந்த அன்பின் திரு உருவத்தை,
+Thulasidharan thillaiakathu
அவர்கள் வலையிலே இன்று காண்போம்.
 நன்றி துளசிதரன் தில்லைக்காத்து அவர்களே.
வலை ஆசிரியருக்கு எமது பாராட்டுகளும்

முருகனுக்கு அந்த அன்பு நெஞ்சத்தைக் கொடுத்த
ஆறுமுகனை அனுதினமும் வணங்குவோம்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே .
எனும்
வாக்கு என்றும் நிசமே.
 

Monday, May 12, 2014

இதை படிக்காது அடுத்த பக்கம் திரும்பாதீர்கள்.

vanathys.com: என் அம்மா

அம்மாவின் அன்புக்கு ஒரு எல்லை உண்டோ ?

தம் செல்வங்களின் நலனுக்காக அவள் படும் துன்பங்களுக்கு ஒரு
எல்லை உண்டோ ?

எந்த ஒரு சூழ்நிலையிலும் அவள் செயல்படுவது தன செல்வங்களுக்கன்றோ?

அவள் தைரியத்தையும் மன உறுதியையும் நிர்ணயிக்க ஒரு
திராசும் உண்டோ ???

இதை படிக்காது அடுத்த பக்கம் திரும்பாதீர்கள். 

மேலே சொடுக்கி மேற்கொண்டு படிக்கவும்.

Wednesday, May 7, 2014

அன்பின் வாசல்: 114 வயது மகானிடம் ஆசி - ஒரு ஆன்மிக அனுபவம்!

அன்பின் வாசல்: 114 வயது மகானிடம் ஆசி - ஒரு ஆன்மிக அனுபவம்!: வாழ்க்கை விசித்திரமானது, சுவாரஸ்யமானது, ஆனந்தமானது, துன்பமானது…. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு விதம். திட்ட...





அவர்கள் வலையிலே ஒரு நிகழ்வு.

குருவருளும் திருவருளும் ஒருங்கே அவர் பெற்ற அற்புதம்.

காண, அவரது வலைப்பதிவுக்குச் செல்ல இங்கே சொடுக்குங்கள்.

இந்த அற்புதத்தை ஒரு கருத்தொவியமாக வரைந்த நண்பர் திருமதி சுசீலா மாரீஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

+Susila Marees

Saturday, May 3, 2014

உங்களுக்கு தெரியாமல் இருக்காது

உங்களுக்கு தெரியாமல் இருக்காது என்று
நன்றாகவே தெரியும்.
இருந்தாலும் ஒரு தரம் மனசுக்குள்ளே
இது என்னா  ?
 புரிஞ்சு வச்சுக்கிறது நல்லது.

Not that you do not know this. But to be doubly sure you have the right thing.

Thursday, May 1, 2014

தாமரை

அட்சய திருதீயை

எல்லா வலை நண்பர்களும் நார்த் உஸ்மான் ரோடுலே எல். கே.எஸ். தங்க மாளிகை, லலிதா ஜ்வல்லெரி , சரவணா தங்க மாளிகை, மற்றும், நல்லி கடைகள் லே சங்கமம் ஆகி இருக்காங்க.

தாத்தா பென்சனர் . தங்கம் வாங்க முடியுமா என்ன?
துரை செல்வராஜ் வலையிலே படிச்சதை அப்படியே இங்கே தர்றேன்.




அட்சய திருதிய அன்று தேவி மகாத்மீயம் படிக்கணும் .
அந்த தேவி ஆகப்பட்டவள் தாமரை மலர் மீது அமர்ந்து
லோகத்தை பரிபாலிக்கிறாள்.

அதுனாலே, இன்னிக்கு தாமரை என்று துவங்கும் சில பாடல்களை பார்ப்போம்.
தேவியின் பாத கமலங்களைப் போற்றுவோம்.

தாமரை பூத்த தடாகமடி.
சுதா ரகுநாதன் பாட கேளுங்கள். .

தாமரை ஒன்று மலரக் கண்டேன்.
ஞானத் தாமரை ஒன்று மலரக் கண்டேன்.
நித்ய ஸ்ரீ என்னமா பாடுகிறாள் !

. thirumathi raajeswari avarkal atchay thirutheeyai andru thaan kuberan kuraiyatha nidhi selvangalai adainthaan.
தாமரை பூவில் அமரந்தவளே
சுசீலா பாடும் பாடல்.

 


கொஞ்சம் ஜகா வாங்கி இந்த பக்கம் திரும்பினா
பழைய பாடல் ஒன்று.

தாமரை கன்னங்கள் .
நாகேஷும் ஜெயந்தியும் கொஞ்சல்கள். எதிர் நீச்சல் படம்.
jaghamani raajeswari in her blog writes:that it is only on this dayAKSHAY THRITHIYAIKUBERA GOT HIS WEALTH by worshipping God Kubera.Please visit her blog to know the significance of this day.Subbu thatha had also a similar dream of becoming Kubera.He thought he will not lag behind.

இருந்தாலும் ஆசை யாரை விட்டது ?
அட்சய திருதீயை அன்று
இப்படி ஒரு சுப்பு தாத்தா பகல் கனவிலே வந்தார்.

Saturday, April 19, 2014

லவ் பண்ணுங்க சார்.

There are the only two things that make life more fruitful- how much love have you given? And how much knowledge have you taken? You may earn millions of dollars, but you will have to leave it here. But what you can take with you is knowledge. What gets imprinted in the consciousness is knowledge. Knowledge is not what you read in a book, but it is awareness.  - Sri Sri Ravi Shankar


ஒரு நூறு நாட்களில்  
ஒரு நூ று பிஸ்ஸா சாப்பிடுபவருக்கு ஒரு நாளைக்கு ஒரு பிஸ்ஸா தானமாக தர இயலுமா? 
மனம் வருமா ? 

இதையும் பாருங்கள்.
இங்கே செல்லுங்கள்.  
வலை செல்ல இங்கே கிளிக்கவும் 
இவர்கள் பற்றியும் எழுதுங்கள்.  
என்று நீங்கள் வரப்போகிறீர்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Thursday, April 17, 2014

நான் யார் ? Who am I ? Easter Greetings to All




who am I ?
நான் யார் ?

 http://llerrah.com/whoamielvis.htm

"Who Am I" - Elvis Presley

( Goodman, Rusty )

When I think of how He came so far from glory
Came to dwell among the lowly such as I
To suffer shame and such disgrace on Mount Calvary
Take my place then I ask myself this question, "Who am I?"



Who am I that the King would bleed and die for?
Who am I that He would pray not my will, Thy Lord?
The answer I may never know, why He ever loved me so
But to an old rugged cross He'd go for who am I?

When I'm reminded of His words, I'll leave Him never!

"If you'll be true I'll give to you life forever"

Oh, I wonder what I could have done to deserve God's only Son
To fight my battles until they're won for who am I?

Who am I that the King would bleed and die for?
Who am I that He would pray not my will, Thy Lord?
The answer I may never know, why He ever loved me so
But to an old rugged cross He'd go for who am I?
But to an old rugged cross He'd go for who am I?

Sunday, April 13, 2014

புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று மட்டும் சொல்லாது
ஒரு அழகிய கவிதையே இயற்றி தனது வலையில் இட்டு இருந்தார்கள். இருவர். ஒருவர் காவியக்கவி . ஆம் இனியா அவர்கள். அடுத்தவர் திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள். இவர்கள் வலை ஆன்மீக வலை. குவியல்கள் என்னும் பெயர் கொண்டது.

இரண்டு நன்பர்களின் பாடல்களையும் சுப்பு தாத்தா பாடி இருக்கிறார்.

சுப்பு தாத்தா அதை மணி ரங்க எனப்படும் ஒரு ராகத்தில் பாடி அவருக்கு அனுப்பி, அவருக்கு வாழ்த்து சொல்ல, இனியா அவர்கள் இனிதே அனுப்பிய
மடல் ஒன்று கீழே இருக்கிறது. 
Let us start this New Year with a beautiful Invocation song by Madam Kaviyakkavi.

திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் எழுதியுள்ள புத்தாண்டு கவிதை 
திருவே வருக என ஸ்ரீ லக்ஷ்மியை ஆராதித்து எழுதப்பட்ட கவிதை. 

ஒரு ராக மாலிகா ஆக சுப்பு தாத்தா பாடி இருக்கிறார். 

அவரது வலைக்கு செல்ல இங்கே சொடுக்கவும். 




இந்த பாடலை அனுப்பிய ஒரு சில நிமிடங்களில் எனக்கு இனியா அவர்களிடமிருந்து கிடைத்த மடல். 

**************************************************************************************
"அன்புடன் தாத்தா பாட்டிக்கு 

நமஸ்காரங்கள் பல.

 நலம் தானே ...! 
 எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.

 இன்னமும் பல பாடல்கள் இயற்ற வேண்டும் போல் ஆனந்தமாக இருக்கிறது. மிக்க நன்றி ...! 


வாழ்க வளமுடன்....! 

 இங்ஙனம்

 இனியா"

+kaviyakavi iniya
****************************************************************************************
எல்லோரும் இனிதே வாழவேண்டும் என்பார்கள் எப்போதும் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள். 

அது போல, நாமும் இன்று வலை உலக நண்பர்கள் யாவரையும் வாழ்த்துவோம். 

எல்லோருக்கும் எங்கள் புத்தாண்டு நல வாழ்த்துக்கள். 




Tuesday, April 8, 2014

ஸ்ரீ ராம நவமி


 
 ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தனது வலையிலே தமது வாழ்த்துக்களை அவர்தம் வலைக்கு வரும் அன்பர்க்கு எல்லாம் வழங்கி இருக்கிறார். 

நாமும் எல்லோருக்கும் ஸ்ரீ  ராம நவமி அன்று திரு இராமனை வழிபட்டு அவர் அருள் உலகத்தோர் அனைவருக்கும் பெற்றிட வணங்குவோம் . 

எல்லோருக்கும் எங்கள் ஸ்ரீ ராம நவமி வாழ்த்துக்கள்.

MADAM RAJARAJESWARI IN HER BLOG www.jaghamani.blogspot.com GREETINGS TO ALL ON THE AUSPICIOUS DAY OF SRI RAMA NAVAMI.

தஞ்சை அன்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள் தஞ்சை மேல வீதியிலே குடி கொண்டு அருள் பாலிக்கும் திரு ராம பிரானின் கோவில் பெருமை தனை தனது வலையில் எடுத்து உரைத்து இருக்கிறார்கள் .


Pomena Ranganatha temple, NY


PLEASE CLICK AT THE CAPTION OF THE PICTURE TO GO TO SRI RANGANATHA TEMPLE AT NEW YORK AND WORSHIP LORD RAMA TODAY.



ஸ்ரீ ரமேஷ் சதாசிவம் அவர்கள் தன வலையிலே ராம பிரானின் நாமங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி மகிழ்கிறார். 

இவர் தன வலை பெயரினை நான் அனுமன் ஐ ஆம் ஹனுமான் என்று வைத்துள்ளது இவரது பக்தியின் முதிர்வை எடுத்துரைக்கும். 






ராம நாமமே நீ துதி மனமே என்று சொல்வது திரு பட்டாபி ராமன் வலை. 
ராம ரசம் என்று பெயருடைத்து. 

 ஸ்ரீ ராம நவமி அன்று ராமன் வீற்றிருக்கும் கோவில்களுக்குச் சென்று வணங்குவது நம் மரபு.







இராமனின் அடியார்களுக்கு நான் அடியேன் என்ற வகையில், முறையில், இந்த ராமன் புகழ் பாடும் வலைகளுக்குச் சென்று ராமனைத் துதிப்போம். 



எல்லோருக்கும் ராம நவமி வாழ்த்துக்கள்.

Sunday, April 6, 2014

Straight from my heart !!: Read what PRIYA SREERAM writes.

இன்று காலை கணினியைத் திறந்ததும் கண்ணில் பட்ட வாசகங்கள் இன்று முழுவதும் எனக்கு உயிரூட்டும் பிராணவாயுவாக இருக்கும். .

அதை என் நண்பர்கள் எல்லோரும் ஒரு முறை பார்த்து சொல்லப்பட்ட செய்தியை உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆங்கிலத்தில் இருக்கும் பதிவு. திருமதி பிரியா ஸ்ரீராம் அவர்களது வலை.

கிளிக்குங்கள். கீழே காணும் தொடர்பினை.

Straight from my heart !!: You are the architect of your own happiness !


We are the architects of our happiness ! This thought resonated with me throughout the week and I penned a .......
(to continue reading, please click above URL)



ஆம். 
இது ஒரு மெழுகுவத்தி. 

எரியும் தீ எப்பவுமே மேல் நோக்கியே இருக்கிறதே !!

மெழுகுவத்தியை தலை கீழே கவிழ்த்தாலும், 
தீ மேல் நோக்கி எழுகிறது. 

நம் அன்றாட வாழ்விலுமே பல நிகழ்வுகள். பல தருணங்கள் .
நாம் விரும்பியோ விரும்பாமலோ, எதிர்பார்த்தோ, எதிர்பாரமலோ,
நமது உற்சாகத்தைக் குறைக்க வல்ல, பல நடவுகள் 
நடக்கின்றன. 

அப்போது எல்லாம், சொல்லிக்கொள்ளுங்கள். 

நான் ஒரு மெழுகுவத்தி. 

இந்த சூழ்நிலையில் இருந்து நான் வெளிவருவேன். 

நான் தொடர்ந்து நானாக இருப்பேன். 

என் உற்சாகம் தொடரும். 

Remember the candle. When you turn it upside down, still the flame goes up. The flame always goes up. In life also so many instances will come, where your enthusiasm is put down, your spirit goes down. Remember, I’m a candle, I’ll come out of this. Nothing whatsoever can stop my spirit, my enthusiasm. Move on like that!  

Sri Sri Ravi Shankar



+தி தமிழ் இளங்கோ
+Dindigul Dhanabalan
+Venkataraman Nagarajan 
+Ramani S 
+Priya Sreeram
+revathi narasimhan 



Monday, March 31, 2014

சுந்தர தெலுங்கினில்.. HAPPY TELUGU NEW YEAR



சுந்தர தெலுங்கினில் ஒரு பாட்டு பாடி,
எல்லா தெலுங்கு நண்பர்களுக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறுவோம் .
Courtesy: www.viji -crafts, blogspot.com

Thank U Madam.
http://viji-crafts.blogspot.in/2014/03/happy-ugadhi.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+VijisCraft+(vijis+craft)

Sunday, March 23, 2014

ஆழ்வார் திருநகரிலே ஒரு இசைப் பள்ளி CHENNAI

subbu thatha has joined this Music School, as a student, of course.

HERE, WE FIND  DEDICATED TEACHERS CONDUCT CLASSES FOR 
KEYBOARD, GUITAR, DRUMS, VIOLIN AND CARNATIC VOCAL MUSIC TOO.




மேலும் விவரங்களுக்கு
கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


Wednesday, March 12, 2014

திடங்கொண்டு போராடு: ஜஸ்ட் ரிலாக்ஸ் - 12/03/2014

திடங்கொண்டு போராடு: ஜஸ்ட் ரிலாக்ஸ் - 12/03/2014

ஹெவியான ஒரு சமாசாரத்தை ஜஸ்ட் ரிலாக்ஸ் என்னும்
தனது வலையிலே மிகவும் அழகாக எழுதி இருக்கிறார்
திரு சீனு  அவர்கள்.

ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாத  ஆணும்,அந்த ஆணின் ஆதிக்கத்துக்கு
ஏதோ ஒரு வகையில் கட்டுப்பட்டு காலமெல்லாம் மனதிற்குள்ளே போராடும் ஒரு மெலிந்த உள்ளமுடைய பெண்ணையும் சித்தரிக்கும் வகையில்,

அண்மையில் வந்த ஒரு படம் கௌதம் மேனன் அவர்களது . அதற்கு மிதமான , மனதிற்கு இதமான ஒரு விமர்சனம் .

இந்த மையக்கருத்தில் பல கதைகள்,தொடர்  கதைகள்,ஏன் ? சில சீரியல்களும் வந்து  விட்டன.


அடுத்து, நண்பர் சீனுவின் பதிவில் சொல்லப்பட்ட வாசகர் கூடம் ஒரு வாயிற் கூடம் ஒரு தங்கச் சுரங்கத்திற்கு.

தமிழ் அன்பர்கள் அனைவருக்குமே.

இவர் பதிவிலே போட்டு இருந்த கோவிலின் நுழை வாயில் போன்றது.

உள்ளே போனால் தான்  வியக்கத்தக்க சிறப்புகள்  புலப்படுகின்றன.

வெளிலே நின்று கொண்டு உள் இருப்பது கல் என்று சொல்ல லாம்.

உள்ளே நுழைபவர்க்கோ தாம் கற்கவேண்டியவை ஏராளம் இருக்கின்றன என்று தெரிய வருகிறது.

பல நடவுகளில், நடப்பு ஒன்று தான். பார்வைகள் பல.

சீனுவுக்கு ஒரு சின்ன இல்ல, பெரிய நன்றி ஒன்று  சொல்லுவோம்.

Sunday, March 9, 2014

மது பனி இரண்டுமா !!

மதுபனி என்றால் ஏதோ ரொம்ப பனி கொட்டும்போது

ஒரு க்வார்ட்டர் மது ..  நோ.. நோ....

அந்த மது இருக்கிற ஜாருக்குள்ளேயே போய் உட்கார்ந்து

இருக்கணும்போல தோன்றுகிறது .

இப்ப இல்ல, அதுக்கெல்லாம் இப்ப வயசில்ல.

ஆனா, வலை நண்பர் தில்லி வேங்கடராஜ் அவர்கள்

பார்த்த மது பனி இரண்டுமே வேறு.
+Venkataraman Nagarajan
மதுபனி என்னும் ஊரிலே வண்ண வண்ண ஓவியங்களைப் பார்த்து ரசித்து மயங்கிய நிலையில்...

நண்பர்கள் நினைவு வர அந்த ஓவியங்களிலே சிலவற்றை தேர்ந்து எடுத்து நமக்காக தனது வலையிலே இட்டு இருக்கிறார்.

சென்று காணத் தவறாதீர்கள்.  மேலே சொடுக்கி செல்லுங்கள்.

திரு வேங்கட நாகராஜ் அவர்களுக்கு ஜே போடுவோம். 

ஒரு சாம்பிள் இங்கே.
மது பனி இரண்டுமா !!

Monday, March 3, 2014

நல்ல உள்ளம் உறங்காது

 இப்பூவுலகில் மனிதனாய்ப் பிறந்தவர்கள் பலர் , அன்றாட வாழ்க்கைக்கு பொருத்தமாக இலாத,   இந்த ஆன்மா பற்றிய சங்கதிகள், சொர்க்கம், நரகம் என்ற வாசகங்கள் பேத்தல் உடான்சு என்று சொல்கின்ற, நம்புகின்ற, அதையும் பிறர் நம்பும்படியாகச் செய்கின்ற  ,வேளையில்

வலை நண்பர் திரு தி. தமிழ் இளங்கோ அவர்கள் தனது வலையில் " நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு சொர்க்கம் நரகம் என்று ஏதேனும் உண்டா என்று கவலைப்பட்டு இருக்கிறார்.

இங்கு உள்ளது.
 http://tthamizhelango.blogspot.com/2014/03/blog-post.html#comment-form

சொர்க்கம் என்று இல்லை என வாதிடும் ஸ்டீபன் ஹாகிங் இங்கே

ஒரு நரம்பியல் நிபுணர் மருத்துவர் தனது சிந்தனைகளே பகிர்கிறார் இங்கே .
சொர்க்கம் இருக்கிறது போல் தான் தோன்றுகிறது. இவர் எண்ணங்களின் வலையிலே இங்கே 

இதை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி தள்ளி விட்டு, ஸ்வர்க்கத்தில் செக்ஸ் இருக்கா இல்லையா ? என்பது பீடர் க்ரீப்ட் அவர்களின் தொலை நோக்கு பார்வை.   கிளிக்குங்கள்.

அவரவர் கவலை அவருக்கு.  எனது சிகாகோ நண்பருக்கு  புரியும்.ரசிப்பார் கூட. 

நமது ஹிந்து மதத்தின் உட்கருத்துக்கள் என்ன ?
இங்கே ராமகிருஷ்ண விவேகானந்த நிலையம் நியூ யார்க் சொல்வது இங்கே

நமது பொய்யா மொழிப்புலவர் வள்ளுவர் கருத்துப்படி அவ்வுலகம் என்று ஒன்று இருக்கிறது.

அருள் இலார்க்கு அவ்வுலகம்  இல்லை
 பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு

 எனும் வள்ளுவனின் வாக்கினை பலர் பல முறை படித்திருந்தாலும்,

அதற்கும் ஒரு படி மேலே சென்று,

பொருளற்றார் பூப்பர் ஒருகால்
அருளற்றார்  மற்றாதல் அரிது

எனும் எச்சரிக்கை தனையும் துச்சமாக நினைத்து,

பொருள் இல்லையேல் இந்தப்புவியில் இனிதான ஒரு வாழ்வு இல்லை என ஒரு முடிவு செய்து  அந்தப் பொருளை எப்படியாவது ஈட்டிட, அந்தப் பொருள் தரும் புகழ் தனை பெற்றிட எந்த ஒரு பாவச் செயலையும் செய்ய முற்படும் இவ்வுலகத்தில்,

சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம் என்பதைப் பற்றி எல்லாம் சிந்தனை செய்ய நேரம் இல்லை, வந்தது வரட்டும் போடா என்று

இறுமாப்புடன் செயல் படும் இந்தக் காலத்தில்,

இதை எல்லாம் ஒரு பக்கம் தள்ளி விட்டு, தனது மனதிலே

நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் பற்றி கவலைப் படும் ஒரு நல்ல உள்ளத்தை பாராட்டாது இருக்க இயலாது.

வலை அன்பர் திரு தமிழ் இளங்கோ அவர்கட்கு,  இக்கருத்தை முன்வைத்தமை குறித்து பாராட்டுக்கள். எமது நன்றி.

ஒன்று கவனித்து இருக்கிறேன்.
 உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது நாம் கேட்ட பாடல் ஒன்று. இன்னமும் இதயத்தில் இனிக்கிறது.

தஞ்சையில், நாங்கள் இருந்த தெருவில், இருந்த நாய் ஒன்று, நான் அலுவலகத்தில் இருந்து வரும் வரையில் அது என் வீட்டு வாசலில் இருந்து காவல் காத்து நிற்கும். அதன் பிறகு தான் அதற்கு போடப்பட்ட உணவை சாப்பிடும். அதைக் கண்டு வியந்து இருக்கிறேன்.



இக்கட்டுரையை படிக்கும்பொழுது இன்னொரு காணொளி கண்ணில் பட்டது.
அதையும் படியுங்கள். பாருங்கள்.



நாம் சொர்க்கத்துக்கு போவோமா, நரகத்துக்கு போவோமா என்று அந்த நாள் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு நாள் இரவிலும் ஒரு நிமிடம் அந்த நாள் என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்த்தாலே நமக்கே புரிந்து விடும்.

அதே சமயம், நம்மிடையே நன்றி உணர்வினை எடுத்து காட்டும் நாய்களுக்கும்,
வெய்யில், மழை என்று பாராது சேற்றிலே வயலிலே அயராது உழைக்கும்
மாடுகளுக்கும்,
தான் பெற்ற கன்றுகளை விட, நமக்கு குடம் குடமாகப் பால் தரும் பசுக்களுக்கும்

சொர்க்கம்
நிச்சயம்.

Saturday, March 1, 2014

ஈரோட்டில் ஒரு விவசாயி பெண்மணி திருமதி கலைவாணி சாதனை

திருமதி கலைவாணி , ஈரோட்டில் ஒரு விவசாயி பெண்மணி, தனது நிலத்தில், எந்த வித மருந்துப் பொருட்களோ அல்லது ரசாயன உரங்கள் போடாமல் தனது உற்பத்தி திறனையும் அதிகரித்து கொள்வது மட்டும் அன்றி, தனது வருடாந்தர லாபத்தினையும் மூன்று பங்கு அதிகரித்து உள்ளார். 

இவர் தனது நிலத்திலேயே உற்பத்தி செய்யப்படும் பஞ்சகவ்யம், ஜீவாம்ருதம், அம்ருதக் கரைசல் என்னும் ஆர்கானிக் உரங்களை மட்டுமே பயன் படுத்துகிறார். 
 சாதனை புரியும் 
இவரது ஆற்றல் மிக்க வர்ணனையை கீழ்க்காணும் வீடியோவில் பார்த்து பயன் பெறவும். 
+
திருமதி கலைவாணி அவர்கள் இயற்கை உரங்கள் கொண்டு தனது லாபத்தை மூன்று பங்காக செய்து இருக்கிறார்.

Kalaivani, an organic farmer in Erode, explains the benefits of organic farming. Using inputs such as Panchagavya, Jeevamritham and Amrithakaraisal prepared in her farm, she is able to more than triple her profit margins when compared to using convetional chemical farming.

Category

Nonprofit
 Please cut and paste the URL below for further details.
http://www.thebetterindia.com/9412/video-kalaivani-used-organic-farming-triple-profits/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheBetterIndia+%28The+Better+India%29


Tuesday, February 25, 2014

ஆண்களைப் பற்றிய பெண்கள் புரிதல்



பெண்களுக்கு உண்மையாக பிடித்தது என்ன ?

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’

காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது.

Paeco Underhill என்ற ஒரு மனோதத்துவ வல்லுநர் தனது அண்மையில் வெளியான ஒரு புத்தகத்தில் எழுதியவற்றை எனது அந்தக்கால நண்பர் திரு ராகவசாமி அவர்கள் ஒரு இ மெயிலில் அனுப்பி இருக்கிறார்கள்.

பேகோ அண்டர்ஹில் அவர்கள் என்ன துறை சார்ந்தவர்? அவர் ஆய்வுகள் எதை இலக்காக் கொண்டவை ? அவர் சாதனை என்ன என்றெல்லாம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக்குக.

குறிப்பாக அவர் சொல்லுவதெல்லாம் இதுவே:

பெண்களைப் பற்றிய ஆண்களின் புரிதல் சரி இல்லை. ஒரு 20 பர சென்ட் கூட இவர்களுக்கு தத்தம் வீட்டுப் பெண்டிரைப் பற்றியே புரிதல் உகந்ததாக இல்லை.

அதே சமயம் ஆண்களைப் பற்றிய பெண்கள் புரிதல் 75 விழுக்காடுக்கு மேல் சரியாக இருக்கிறது. 


“பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’
என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர்.
 அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் வெறுப்படைகின்றனர்!’

என்கிறார் பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர்,
 We live in a world that is owned by men, designed by men, and managed by men – and yet we expect women to be active participants in it.”-- Paco Underhill
“வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார்.
இதோ அந்த விஷயங்கள்:
1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும். என்ன பிரச்னை வரும் நன்றாகவே அவர்களுக்குத் தெரியும் 


2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?


3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமாவில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரிசமமாக நடத்த வேண்டும்.


4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண்டும். உள்ளாடை வெளியே தெரியும்படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷோகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.]

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக்கிறது, “டிவி’ யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.


பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற்றோரோ, குழந்தைகளோ நிறைவேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.
Sent from my Smartphone
by my old friend Sri K.Raghavasamy,Karaikkal.

இந்த மனோ தத்துவ நிபுணர் கூறியவற்றில் எது எது நீங்கள் ஒப்புக்கொள்ளக் கூடியது ?

 முதலில் உலகில் தமிழ் உலகில் ஊடகங்கள் மூலம் எல்லோருக்கும் அறிமுகமான பெண் உரிமை, மற்றும் பெண்கள்  மன நலம் குறித்து பேசுபவர்கள் சமூக சிந்தனையாளர்கள் பார்வையாளர்கள் திருமதி ஓவியா, திருமதி டாக்டர் ஷாலினி போன்ற வர்களது கருத்துக்களை பார்ப்போம் என்று முதலில் நினைத்தேன்.

பிறகுதான் , அனுபவம் மிகவும் பெற்ற சக வலைப் பதிவாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது தான் சாலச் சிறந்தது என்று தோன்றியது.

நமக்கு வேண்டியது ப்ரொபசனல் அட்வைஸ் அல்ல. யதார்த்த நிலை என்ன ?
என்பது தானே ?

எனக்கு அறிமுகமான பெண் பதிவாளர்கள் என்ன சொல்கிறார்கள்.?
 அவர்களது எக்ஸ்பர்ட்ஸ் ஒபினியன்ஸ் என்ன என்ன ?
இவர்களது பார்வையில் எழுதியவை படுமா என்று தெரியவில்லை.

+Ramalakshmi Rajan
+Ranjani Narayanan
+Geetha Sambasivam
+Thenammai Lakshmanan 
+Gomathy Arasu
+rajalakshmi paramasivam
+raji venkat
+பார்வதி இராமச்சந்திரன்.
+Mythily kasthuri rengan
+Mathangi Mathangi
+Gayathri S 
+Ananya Mahadevan
+Tulsi Gopal
+Susila Marees
+Shylaja Narayan
+revathy rkrishnan
+jayagowri suryanarayanan
+sudha narayanan
+priyadontics Deepapriya
+Priya Baskaran 
+Viji Ganesan
இந்த லிஸ்டில் விட்டுப்போயிருந்தாலும் நீங்கள் பின்னோட்டம் இடலாம். அல்லது எனது இ மெயில் க்கு கருத்துக்களை அனுப்பலாம்.


ஆண்களும் கருத்து சொல்லுங்கள். உங்கள் மனைவி என்ன நினைக்கிறாள் என்றும் சொல்லுங்கள். 

Sunday, February 23, 2014

கரந்தை ஜெயக்குமார்: மொழியும் வாழ்வும்

இன்று நீங்கள் படிக்கவேண்டிய வலைப்பதிவு. 



கரந்தை ஜெயக்குமார்: மொழியும் வாழ்வும


இப்பதிவின் ஒவ்வொரு வாக்கியமும்
ஒவ்வொரு வார்த்தையும்
இல்லை,
ஒவ்வொரு எழுத்துமே
நெஞ்சை ஊடுருவிச் சென்று
இதயச் சுவர்களை
இனிக்கச் செய்கிறது .
சில செய்திகள் இதயத்தைக்
கனக்கவும் செய்கின்றன.
வரதட்சணை கொடுமை பற்றிய
நாட்டுப்புற பாடல் இயற்றியது யார் ?
எனத் தெரியவில்லை.

யாராக இருந்தாலும்
வாயாரப் போற்றத்தக்கவர்.

வள்ளுவர் என்ன சொன்னார் ?
திருக்குறளைப் படித்தால்
என்ன கிடைக்கும் ?

உடன் செல்லுங்கள் .இங்கே:






பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது
இன்றைக்குச் சாதாரணமான வரியாக இருக்கலாம். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கூட அது
கடினம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று
வள்ளுவர் சொன்னாரென்றால், உண்மையிலேயே உலகத்தின், முதல் புரட்சியாளராக, நான்
வள்ளுவரைப் பார்க்கிறேன்
.

Saturday, February 22, 2014

பாரதி கண்ட தமிழ்த் தாத்தா.

 எதுவுமே எவருமே அருகில் இருக்கையிலே அருமை தெரிவதில்லை.
அதை இழந்தபின்பு தான் அதன் அருமை தெரிகிறது.
அது போலவே, சான்றோர் பலர் அவர் தம் வாழ்நாளிலே அதிகம் போற்றப்படுவது இல்லை. அவரது சிறப்பும் ஆற்றிய பணியும் தொண்டும் அவர் உடலை நீத்து வெகு காலம் கழிந்தபின்பு தான் தெரிய வருகிறது.

பாரதி இதற்குத் தக்கதோர் சான்று.
அந்த பாரதி,  மீசை வச்ச முண்டாசுக்கவி,
தமிழ்த்தாத்தா என நாம் போற்றும் உ.வே.சுவாமிநாத அய்யர் பற்றி அழகான ஒரு பாடலை இயற்றி இருக்கிறார்கள்.

இப்பாடலை இன்று தான் நான் சதங்கா அவர்கள் வலையிலே பார்த்தேன்.
அதை எனது வலை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவேன் .

சதங்கா அவர்களுக்கு எமது நன்றி.
 (சதங்கா வலைக்குச் செல்ல மேலே கிளிக்கவும்)

நீங்கள் இனி படிப்பது சதங்காவின் எழுத்துக்கள்.
தமிழ்த் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் உ.வே.சா. அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணி அளவிடற்கரியது.   ஒரு படைப்பாளியையே நாம் காலம் கடந்து தான் போற்றுகிறோம்.  பாரதி வாழ்ந்த வரை அவருக்கு மலை போல குவிந்தன அவமானங்களே.  அப்படியிருக்க, மற்றவரின் படைப்புகளை, அதுவும் பல்லாண்டு கால முந்தையவற்றை, சுவடியிலிருந்து அச்சுக்குக் கொண்டு வந்தவரை, நாம் பாராட்டியா புகழ்ந்திருப்போம் ?!!  ஆனால், உ.வே.சா. அவர்களை பாரதி புகழ்ந்திருக்கிறார்.


நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
     இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம்  என்று மனம் வருந்தற்க
     குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
     காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
     இறப்பின்றி துலங்குவாயே.









உ.வே. சுவாமிநாத  ஐயரது வாழ்வே தமிழுக்கு அவர் செய்த தொண்டின் சரித்திரமாக விளங்குகிறது.  அவர் தம் ஆய்வுகளைப் பற்றி மேலும் அறிய  சொடுக்குக இங்கே.http://en.wikipedia.org/wiki/U._V._Swaminatha_Iyer

Thursday, February 20, 2014

NEUTRAN STAR SPEEDING FROM 2.5.MILLION TO 5 MILLION mph

விண்வெளியில் 2.5 மிலியன் மைல்கள் வேகத்தில் பறந்து போகும் ஒரு ந்யூட்ரான் நக்ஷத்திரம்.

நாசா செய்திளை படித்து மேலும் விவரங்கள் அறிந்து கொள்ளவும்.
  •  
  •  
  • RUN AWAY PULSAR WITH SPEED OF 2.5 மில்லியன் மைல் 
  • (மேலே க்ளிக்கிட்டு விவரங்கள் அறிந்து கொள்க.)
  • A runaway pulsar with an extraordinary jet trailing behind it has been found.

  • This pulsar - a spinning neutron star - is moving between 2.5 million and 5 million miles per hour.

  • Behind the pulsar there is a tail that stretches for 37 light years, making it the longest X-ray jet ever seen from an object in the Milky Way.

  • This tail has a corkscrew pattern, indicating that the pulsar is wobbling like a top as it spins.

Wednesday, February 19, 2014

பரியினும் ஆகாவாம் பாலல்ல

பரியினும் ஆகாவாம் பாலல்ல 
  உய்த்துச் சொரியினும் போகாதம


என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப,

நமக்கென்று எது உள்ளதோ
அது நம்மை எப்படியும் வந்து சேரும்.

அதை யாரும் எடுத்துச் செல்ல போக இயலாது
அதே போல உனக்கில்லாததை
 நீ உனது என்று நினைத்து எடுத்து வந்திருந்தாலும்
அது உனக்குப் பயன் படாது.

எனும் கருத்தமைந்த ஒரு வலைப்பதிவு
இன்றைய வால் போஸ்டர்  முதன்மைச் செய்தி. 

இது ஒரு ஆங்கில வலைபதிவு. ஆவிஸ்  .
மேலே சொடுக்கிடவும்.
செல்லுங்கள் படித்துப்பயன் பெறுங்கள்.

Whatever’s yours will come to you – no matter what!

Nobody can take away what is due to you and nothing can help you get what’s not meant for you! This is an unalterable Law of Life!


Tuesday, February 18, 2014

மறவாது எழுதுங்கள் மரபில் கவிதை

புலவர் இராமானுசம் தமிழ் வலை உலகில் மூத்த பதிவர்.  ஒரு கணமதில் ஒரு நூறு கவிதைகள் எழுதும் அதுவும் மரபுக் கவிதைகள் எழுதுவதில் தமிழ் இலக்கியத்திற்கு புகழ் சேர்ப்பதில் முன் அணியில் உள்ளார்.  இவரை அருகில் காண்பதற்கு அவருடன் உரையாடுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவரது கவிதை இது.
செம்மொழி தமிழில் மரபுக் கவிதைகளின் சிறப்பினை நயமாக எடுத்துரைக்கிறார் .
கவிதை முழுவதையும் படித்திட அவரது வலை இங்கே 
அவரது வலை பாடலை கேட்டிட இங்கே சொடுக்குங்கள்.
சுப்பு தாத்தா பாடகர் அல்ல. இருப்பினும். இக்கவிதையை ஷண்முக பிரிய , ஹிந்தோளம் எனும் இரு ராகங்களில் பாட முயன்று இருக்கிறார்.

Monday, February 17, 2014

சரஸ்வதியே மீசை வச்சுக்கிட்டு உருவிலே வந்த Rajesh Vaidhya



 அற்புதமாக வர்ணனை செய்பவர் எனது வலை நண்பர்
அகில உலக தமிழ் வலை தலைவி
திருமதி துளசி கோபால் அவர்கள்.
இவர்கள் வலைக்குச் செல்ல மேலே சொடுக்குங்கள்.

கீழே நீங்கள் படிப்பது அவர்களது எழுத்து.

நன்றி: திருமதி துளசி கோபால் அவர்களே .

ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை. என்ன அற்புத வாசிப்பு! அந்த சரஸ்வதியே மீசை வச்சுக்கிட்டு வாசிச்சாளோ? தன்னுடைய குருநாதருக்குத் தன் வணக்கத்தையும் நன்றியையும் சொன்ன கையோடு, குருநாதர் கம்போஸ் செஞ்ச குயில் பாட்டு ஒன்னு வாசிச்சார் பாருங்க....


ஹைய்யோ!!!! வீணை பேசும் என்பார்கள். சரி. குயில் போலும் கூவுமோ!!!! 

 மனசை இழுத்துப்பிடிச்சு  வீணையில் லயிக்கவிட்டேன்.  சொல்லவிட்டுட்டேனே.... கடவுள் வாழ்த்துப்பாடிய இளைஞி,  வீணை வாசிப்பு முழுசுக்கும் பக்கவாத்தியமா புல்லாங்குழல்  வாசிச்சு அமர்க்க்களப்படுத்திட்டார். நல்ல எதிர்காலம் அமையட்டுமுன்னு மனசார வாழ்த்தினேன், மனசுக்குள். (ஏன் அவர் பெயரை பேனரில் போடலை? )
ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை.  என்ன அற்புத வாசிப்பு!  அந்த சரஸ்வதியே  மீசை வச்சுக்கிட்டு வாசிச்சாளோ?

உண்மைதான். சரஸ்வதி தேவி கடாக்ஷம் பரிபூர்ணமா இருந்தால் தானே இப்படி ஒரு சாதகம் சாத்தியம் !!

Saturday, February 15, 2014

வாசகர் கூடம் எனும் புதிய வலையில்

வாசகர் கூடம் எனும் புதிய வலையில்
(மேலே சொடுக்குங்கள்)
இன்று ஆதி வெங்கட் எழுதும் 
மதிப்புரை. 

படிக்கத் தவறாதீர்கள்.
http://vasagarkoodam.blogspot.com/
அப்பதிவில் இருந்து
ஒரு சில வாக்கியங்கள் மட்டும் கீழே :

 “வாழ்க்கைங்கறது எழுத்தாளர்கள் கற்பனைல உருவாக்கற நாவலோ, இல்லை பூதாகாரப் பொய் வடிவமான சினிமாவோ இல்லை. அது யாருமே நினைச்சுப் பார்க்காத திசையிலும் மேடு பள்ளங்களிலும் நம்மை இழுத்துகிட்டுப் போற ஒண்ணு. நாமளும் அது இழுப்புக்கு போய்த்தான் தீரணும். நாவல்லயும், சினிமாவுலையும் தான் நாம விரும்புற முடிவுகள் நமக்குக் கிடைக்கும். வாழ்க்கைல அப்படிக் கிடையாது.”
இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:- திருவரசு புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 17. ஏப்ரல் 2001 ஆண்டு பதிப்பின் படி 248 பககங்கள் கொண்ட இதன் விலைரூ 65.
மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட், திருவரங்கம்.

+Adhi Venkat 
+Balasubramanian Ganesh